வியாழன், ஆகஸ்ட் 28, 2014

கற்பழிப்பு வழக்குபதிவு: சதானந்த கவுடா மகன் திருமணம் நடைபெறுமா?

மத்திய ரெயில்வே மந்திரி சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடாவின் திருமண நிச்சயதார்த்தம் நேற்றிரவு குடகு பகுதியில் உள்ள குஷால் நகரில் நடந்தது.

இந்த நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருக்கும்போது கன்னட நடிகையும், மாடலிங் அழகியுமான மைத்ரியா கவுடா பெங்களூர் ஆர்.டி. நகர் போலீஸ் நிலையத்துக்கு வந்து ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறி இருந்ததாவது:–

சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக்கும் நானும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தோம். கடந்த ஜூன் மாதம் 5–ந்தேதி அவர் மங்களூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து என்னை ரகசிய திருமணம் செய்து கொண்டார். எங்கள் திருமணம் கார்த்திக்கின் கார் டிரைவர் முன்னிலையில் நடந்தது.
திருமணம் முடிந்ததும் என்னுடன் அவர் குடும்பம் நடத்தினார். ஆனால் திருமணம் பற்றி வெளியில் அவர் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. உரிய நேரம் வரும்போது தன் தந்தை சதானந்த கவுடாவிடம் பேசி சம்மதம் பெறுவதாக கூறி இருந்தார்.

இப்போது அவர் திடீரென என்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள நிச்சயதார்த்தம் நடத்தி உள்ளார். என்னை ஏமாற்றி பாலியல் உறவுகளில் ஈடுபட்டார்.எனவே கார்த்திக் கவுடா மீது திருமணம் செய்து ஏமாற்றியதாவும், பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து கார்த்திக் கவுடா மீது ஆர்.டி.நகர் போலீசார் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376 (பாலியல் பலாத்காரம்) 420 (ஏமாற்றுதல்) ஆகிய 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் தன் மீதான புகாரை கார்த்திக் கவுடா மறுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக