நாட்டில் பசு வதையை தடைசெய்ய வேண்டும் என்று ஹிந்து ஜனஜாக்ருதி சமிதி அமைப்பு (ஹெச்ஜேஎஸ்) வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் அமைதியாக இருக்கக்கூடாது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
இது தொடர்பாக கோவா மாநிலத் தலைநகர் பனாஜியில் அந்த அமைப்பின் தேசிய செய்தித் தொடர்பாளர் ரமேஷ் ஷிண்டே திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டில் பசு வதையை தடை செய்யாமல் பசுக்களை பாதுகாப்பது என்பது நடக்காத காரியம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுக்களை பாதுகாப்பதற்காக “தேசிய கோகுல் மிஷன்" திட்டத்தை அண்மையில் ராதா மோகன் தொடங்கி வைத்தார். இந்நிலையில் பனாஜிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவரிடம் பசு வதை தடுப்பு மசோதா கொண்டுவரப்படுமா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கு அவர் தெளிவான பதிலை அளிக்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக