முன்னர் நடந்த தேர்தலைப் போல வரவிருக்கும் தேர்தலிலும் சமூகங்கள் ஒருவருக்கொருவர் விரோதமாக திரும்புவது குறிப்பிடத்தக்கது. முன்னர் நடந்த கலவரங்களுக்கான திட்டங்களை தீட்டி அதன் மூலம் எந்த அரசியல்வாதிகள் பலனடைந்தார்களோ அவர்கள் தாம் இக்கலவரங்களின் பின்னணியிலும் இருக்கிறார்களோ? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை சமூகங்கள் தங்களது உரிமைகளுக்காக ஒன்றிணைந்து போராடுவதை விடுத்து தங்களது எதிரிகள் எதனை விரும்புகின்றார்களோ அதே வழியில் நிலைமையை எதிர்கொள்வது துரதிர்ஷ்டவசமானது. இரு சமூகத்தினரும் பரஸ்பரம் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் கடைப்பிடிக்குமாறு ஓ.எம்.ஏ.ஸலாம் அவர்கள் வலியுறுத்தினார். சமூகத்தலைவர்கள் தங்களது சமூகத்தின் உறுப்பினர்கள் அரசியல்வாதிகளின் விளையாட்டுக்களுக்கு பலியாகிவிடாமல் இருப்பதை உறுதிச் செய்வதோடு, இம்மாதிரியான முயற்சிகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்கவேண்டும். யார் இக்கலவரத்தில் தொடர்புடையவர்களோ, அவர்களுக்கு சமூகங்கள் ஆதரவு தரக்கூடாது. மேலும் குழப்பம் விளைவிப்பவர்கள் தனிமைப்படுத்தப்படவேண்டும்.
உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படவேண்டும் என்று ஓ.எம்.ஏ ஸலாம் அவர்கள் உ.பி அரசை கேட்டுக்கொண்டுள்ளார். எதிர்காலத்தில் இம்மாதிரியான நிகழ்வுகள் ஏற்படாமலிருக்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பாதிக்கப்பட்ட சமூகங்களின் தலைவர்களுடன் இணைந்து பயனுள்ள வழிமுறைகளை முன்னெடுக்கும் என்று ஓ.எம்.ஏ ஸலாம் அவர்கள் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக