குவஹாத்தி:அன்னா ஹஸாரே குழுவைச் சார்ந்தவரும், மனித உரிமை ஆர்வலருமான அகில் கோகோய் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் கவுன்சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இதர ஐந்து நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.காங்கிரஸ் கவுன்சிலர் தபர் பர்மன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளையில் ஹஸாரே குழுவைச் சார்ந்த கோகோய் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நல்பாரி மாவட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த முழு
அடைப்பு அமைதியாக நடந்தது என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
அஸ்ஸாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக கோகோய், புர்ணி கிராமத்திற்கு சென்றிருந்தார். அப்பொழுது கோகோய் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மர்ம நபர்கள் சிலர் மூங்கில் கம்புகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களால் கோகோய் மீது தாக்கி உள்ளனர். வீடியோ கேமராவையும் கைப்பற்றினர். இதில் காயமடைந்த கோகோய், நல்பாரி ஸ்வாஹித் முகுந்தா ககட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று இச்சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்த கோகோய், குற்றவாளிகளை கைதுச் செய்யும் வரை மாவட்டத்தை விட்டு வெளியேறப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக