
லிங்காயத் சமூகத்தை திருப்திபடுத்தும் வகையில் அச்சமூகத்தைச் சார்ந்த ஷெட்டாரை முதல்வராக்க பா.ஜ.க முடிவு எடுத்துள்ளது. ஈஸ்வரப்பாவுடன் ஒக்கலிகர் சமுதாயத்துக்கு பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் ஆர். அசோக்கை துணை முதல்வராக்கவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், அரசியல் குழப்பங்கள் நீடிப்பது மாநில நிர்வாகத்தைச் சீர்குலைக்கும். எனவே, முதல்வர் பதவியில் இருந்து என்னை நீக்குவதா அல்லது முதல்வராக நானே தொடர்வதா என்பது பற்றி உடனடியாகத் தீர்மானிக்க வேண்டும். இந்தக் கருத்தை கட்சி மேலிடத்திடம் வலியுறுத்துவேன் என்றார் சதானந்த கெளடா.
முதல்வர் பதவியிலிருந்து சதானந்த கெளடாவை நீக்க கர்நாடக ஒக்கலிகர் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவர் கெஞ்சப்பா கெளடா கூறியது:
சதானந்த கெளடாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்குவதைக் கண்டிக்கிறோம். லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான் முதல்வராக இருக்க வேண்டும் என்று பா.ஜ.க.எடுத்துள்ள முடிவு சரியானதல்ல.
ஒக்கலிகர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் முதல்வராக இருக்கக் கூடாதா? சதானந்த கெளடாவை நீக்குவதற்கான காரணம் என்ன? எடியூரப்பாவின் அரசியல் மிரட்டலுக்கு அடிபணிந்து சதானந்த கெளடா நீக்கப்படுவதை ஏற்க முடியாது. இதைக் கண்டித்து திங்கள்கிழமை(ஜூலை 9) போராட்டம் நடத்துவோம் என்றார் கெஞ்சப்பா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக