
தனிப்பட்ட வாழ்வில் உஸாமா ஒழுக்கமானவர் என்று அவருக்கு எதிரான மீடியாக்களே முன்பு செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையில் ஆபாசமான செய்திகளுடன் உஸாமாவை தொடர்பு படுத்தும் இழிவான செயல்களில் அமெரிக்காவை திருப்திப்படுத்தும் சில மீடியாக்கள் அவரது மரணத்திற்கு பிறகு செய்திகளை வெளியிட்டன.
தற்பொழுது ஆபாசத்தை பரவச்செய்து சமூகத்தை சீர்கெடுக்கும் பாலிவுட்டின் இயக்குநர்களின் ஒருவரான ராம்கோபால் வர்மா, தனது ட்விட்டர் செய்தியில் சன்னி லியோன் என்ற ஆபாச பெண்மணியின் பாலியல் வீடியோவை அமெரிக்க படையினர் சுற்றி வளைத்தபோது உஸாமா பார்த்துக் கொண்டிருந்தார் என்ற அவதூறை பரப்பியுள்ளார்.
இந்த செய்தியை அவருக்கு யார் அளித்தார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ராம்கோபால் வர்மா என்ற அரைவேக்காடு கூறியதை இங்குள்ள மீடியாக்களும் அப்படியே வாந்தி எடுத்துள்ளன.
பரபரப்புக்காக எந்த இழிவான செயலையும் செய்ய துணிந்த மீடியாக்கள் எப்பொழுது திருந்தப் போகின்றனவோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக