வியாழன், மார்ச் 20, 2014

உள்கட்டமைப்பு வசதிகுறைவாகவே உள்ள ஈரோடு பாராளுமன்ற தொகுதி

ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி மற்றும் காங்கயம், தாராபுரம்(திருப்பூர் மாவட்டம்), குமாரபாளையம்(நாமக்கல் மாவட்டம்) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.ஈரோடு பாராளுமன்ற தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக அ.கணேசமூர்த்தி உள்ளார். தமிழகத்தில் ம.தி.மு.க. வசம் உள்ள ஒரே தொகுதியாக ஈரோடு உள்ளது.
இந்த தொகுதி விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள், ஜவுளி, ஜவுளி சார்ந்த சாயம், தறிப்பட்டறை தொழில்களை முக்கிய தொழிலாக உள்ளடக்கியது. தேங்காய் எண்ணை ஆலை, புண்ணாக்கு ஆலை மற்றும் புதிய தொழிற்சாலைகளும் இந்த தொகுதியில் அதிக அளவில் உள்ளன.

ஆனால் உள்கட்டமைப்பு வசதி ஈரோடு தொகுதியில் மிகவும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக ஈரோட்டில் இருந்து பழனிக்கு ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்பது தாராபுரம் மற்றும் காங்கயம் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். இதற்காக கடந்த ஆட்சியில் சர்வே பணிக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கியது. சர்வே பணிகள் முடிவுறும் காலம் நெருங்கியும், நிலம் கையகப்படுத்தும் பணிகள் ஏதும் தொடங்கவில்லை. இந்த நிலையில் ஈரோடு–பழனி ரெயில் பாதை திட்டம் வருவாய் குறைவாக இருக்கும் என்ற காரணத்தை காட்டி நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
இதுபோல் காங்கயம் சட்டசபை தொகுதிக்கு உள்பட்ட சென்னிமலை வழியாக மத்திய அரசின் எரிவாயுக்குழாய் திட்டம் செயல்படுத்தவும் விவசாயிகள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு உள்ளது. எனவே இந்த பிரச்சினை வருகிற பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்.
ஈரோடு நகரில் சாயம் மற்றும் தோல் தொழிற்சாலைகளை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. ஆனால், இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கீழ்பவானி பாசன திட்ட கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் அரசின் திட்டத்துக்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பும்–ஆதரவும் என இரு வகையான கருத்துகள் உள்ளன. இந்த பிரச்சினையும் தேர்தலில் எழுப்பப்படும்.
ஈரோடு பாராளுமன்ற தொகுதி மறு சீரமைப்பின் போது புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதியாகும். திருச்செங்கோடு பாராளுமன்ற தொகுதி நீக்கப்பட்டு புதிதாக ஈரோடு பாராளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது. கடந்த 2009–ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி சார்பில் முன்னாள் மத்திய மந்திரியும், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார். அ.தி.மு.க.–ம.தி.மு.க. கூட்டணி சார்பில் ம.தி.மு.க. ஈரோடு மாவட்ட செயலாளர் அ.கணேசமூர்த்தி போட்டியிட்டார். மேலும் கொங்குநாடு முன்னேற்றக்கழகம், தே.மு.தி.க. ஆகியவையும் இந்த தேர்தல் களத்தில் இருந்தன. மொத்தம் 25 பேர் போட்டியிட்டனர்.
இதில் ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி 2 லட்சத்து 84 ஆயிரத்து 148 வாக்குகள் பெற்று ஈரோடு பாராளுமன்ற தொகுதியின் முதல் எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அவருக்கு அடுத்தபடியாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 2 லட்சத்து 34 ஆயிரத்து 818 வாக்குகள் பெற்றார்.
ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 604 வாக்குகள் பெற்ற கொங்கு நாடு முன்னேற்றக்கழகத்தின் கே.கே.சி.பாலசுப்பிரமணியம் 3–ம் இடத்தை பிடித்தார். தே.மு.தி.க. வேட்பாளர் கே.ஜி.முத்துவெங்கடேஸ்வரன் 91 ஆயிரத்து 8 வாக்குகள் பெற்றார். பா.ஜனதா கட்சியின் என்.பி.பழனிச்சாமி 8 ஆயிரத்து 429 வாக்குகள் பெற்று இருந்தார்.
பின்னர் 2011–ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளையும் அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது.
ஈரோடு பாராளுமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 12 லட்சத்து 96 ஆயிரத்து 539 பேர்.
ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் வேளாள கவுண்டர்கள், வேட்டுவ கவுண்டர்கள், முதலியார்கள், வன்னியர், நாடார், ஆதி திராவிடர் மக்கள் அதிக அளவில் உள்ளார்கள். நாயக்கர் சமூகத்தை சேர்ந்தவர்கள், வாணிய செட்டியார்கள், தெலுங்கு நாயுடு சமூகத்தினரும் உள்ளனர். மேலும், ஈரோடு நகரில் கணிசமான அளவு வடஇந்திய மக்களும் உள்ளனர்.
ஈரோடு பாராளுமன்ற தொகுதியின் எம்.பி.யாக இருக்கும் அ.கணேசமூர்த்த உள்கட்டமைப்புவசதிகுறைவாகவே உள்ளதால் தொகுதி மக்கள் அதிர்ப்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக