புதன், மார்ச் 19, 2014

வாகனங்கள் விற்பனை சரிவால் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் கடன் வளர்ச்சி 50% குறையும்


நடப்பு 2013–14–ஆம் நிதி ஆண்டில் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் சில்லறை கடன் வளர்ச்சி 50 சதவீதம் குறைந்து 8–10 சதவீத அளவிலே இருக்கும் என தர ஆய்வு நிறுவனமான இக்ரா மதிப்பிட்டுள்ளது. சென்ற நிதி ஆண்டில் இது 19 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது.

பொருளாதார வளர்ச்சி குறைந்ததை அடுத்து வாகனங்களின் விற்பனை தொடர்ந்து பல மாதங்களாக சரிவை சந்தித்துள்ளது. நிறுவனங்களும் விரிவாக்க நடவடிக்கைகளில் களம் இறங்க தயங்கின. மேலும் குடியிருப்புகளின் விலையும் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் இதில் முதலீடு செய்ய தயங்கினர். தங்கம் மீதான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் தங்கத்திற்கு வழங்கப்படும் கடனின் மதிப்பு குறைக்கப்பட்டது.

 இதனையடுத்து இப்பிரிவுகளில் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் கடன் வளர்ச்சி குறைந்தது. நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்நிறுவனங்களின் கடன் வளர்ச்சி 5 சதவீதமாகவே உள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலத்தில் 15 சதவீதமாக இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக