செவ்வாய், மார்ச் 18, 2014

வெனிசூலாவில் ராணுவ முகாமை நோக்கி பேரணி, பயங்கர மோதல்


வெனிசூலா நாட்டில் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக ஒரு மாதமாக போராட்டம் நடக்கிறது. இதில் 28 பேர் பலியானதுடன் 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும் 1,500 பேர் கைதானார்கள். இந்த போராட்டம் இப்போது கியூபாவிற்கு எதிரான போராட்டமாக திரும்பியது.


ராணுவ செயல்பாடுகளில் கியூபா தலையிடுவதாக கூறி தலைநகர் காரகாசில் நேற்று ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணியாக அங்குள்ள ராணுவ விமான தளம் நோக்கி சென்றனர். இவர்களை தடுத்து நிறுத்த ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வெடித்தார்கள். உடனே ஆர்ப்பாட்டக்காரர்கள் சரமாரியாக கற்களை வீசினர். இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் விளைவாக மோட்டார் சைக்கிள்களில் ராணுவத்தினர் சென்று முற்றுகையிட்டு பலரை பிடித்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக