ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 2 நாள் தேர்தல் பிரசார பயணமாக பெங்களூருக்கு வந்தார். பெங்களூரில் நேற்று முன்தினம் இரவு உணவு விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. சிலர் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் பணத்தை மட்டும் செலுத்தினார்கள்.
‘ஆம் ஆத்மி கட்சியின் நலம் விரும்பிகள்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை பிரபல கம்ப்யூட்டர் நிறுவன நிர்வாகக்குழு முன்னாள் உறுப்பினரும், பெங்களூர் தெற்கு தொகுதி வேட்பாளருமான பாலகிருஷ்ணன் ஏற்பாடு செய்து இருந்தார். வெளிப்படையான முறையில் கட்சி வளர்ச்சிக்கு நிதி திரட்டும் இந்த நிகழ்ச்சியில் சுமார் 200 பேர் பங்கேற்றதாகவும், இதன்மூலம் ரூ.50 லட்சம் திரட்டப்பட்டதாகவும் பாலகிருஷ்ணன் கூறினார்.
ஊடகங்களை கடுமையாக விமர்சித்து கெஜ்ரிவால் பேசி இருந்தார். இப்போது அவரது கட்சியே இரவு உணவுக்காக நபர் ஒருவருக்கு தலா ரூ.20 ஆயிரம் வசூலித்ததன் மூலம் ஊடகங்களின் கேள்விக்கு ஆளாகி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக