பெருநாட்டில் வடமேற்கு பகுதியில் உள்ள ஈக்குவடார் எல்லைப்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. தென்மேற்கு பயூரா பகுதியில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடலில் 9.8 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அந்நாட்டு தேசிய உள்நாட்டு பாதுகாப்பு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், வடக்கு கடற்கரையோர மக்கள் நிலநடுக்கம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறி தெருவில் ஓடியதாகவும், அங்குள்ள தேவாலயத்தின் கூரை சேதம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பக்கத்து நாடான ஈக்குவடார் நாட்டிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.இதேபோல், இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவிலும் நேற்றுமுன்தினம் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோவிலில் 5.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக