முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைப் உத்தரபிரதேச மாநிலம் புல்புர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அவர் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, ‘‘நான் கிரிக்கெட் போட்டிக்காக பயணம் செய்யும்போது மராட்டியம் அல்லது தென் மாநிலங்களில் பார்த்த வளர்ச்சி பணிகள், உத்தரபிரதேசத்தில் இல்லை.
குறிப்பாக அலகாபாத்தில் வளர்ச்சி பணிகளோ, கூடுதலான விளையாட்டு கட்டமைப்பு வசதிகளோ எதுவும் இல்லை. நான் எனது சொந்த மாநிலத்துக்கு, குறிப்பாக நான் பிறந்த அலகாபாத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கருதுகிறேன்.
மூத்த கிரிக்கெட் வீரர்களான சச்சின் தெண்டுல்கர், ராகுல்டிராவிட், சவுரவ் கங்குலி, வீரேந்தர் சேவக், ஹர்பஜன்சிங் ஆகியோர் எனக்கு போன் மூலம் வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் எனது தேர்தல் பிரசாரத்திற்கு வசதியான நேரத்தில் உதவுவதாக என்னிடம் உறுதி அளித்துள்ளனர். நான் கிரிக்கெட்டில் பவுண்டரியோ, சிக்சரோ விளாசியதில்லை என்றாலும் விரைவான ஒரு ரன், 2 ரன்கள் எடுத்து ஸ்கோரை உயர்த்துவேன். ஆனால் அரசியலில் அதைவிட சிறப்பாக பணியாற்ற திட்டமிட்டுள்ளேன்’’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக