புதன், மார்ச் 19, 2014

நாடாளுமன்றத் தேர்தலுக்கு அருணாச்சல பிரதேசத்தில் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை

நாடாளுமன்றத் தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது. எல்லா மாநிலங்களிலும் வேட்பு மனுத்தாக்கல், வேட்பாளர் பட்டியல் என பரபரப்பாக இருக்கும் சூழலில் அம்மாநிலத்தில் யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
அருணாச்சல பிரதேசத்தில் மக்களவை தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு மார்ச் 26 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். மனுத்தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வரும் நிலையில் 60 தொகுதிகள் கொண்ட சட்டமன்றத் தேர்தலுக்கு இதுவரை வெறும் 5 பேர் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, அருணாச்சல பிரதேச மாநிலத்தில் தற்போது அமைச்சராக பதவியில் இருக்கும் பேமா கண்டு உட்பட நான்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஒருவர் பா.ஜ.க. வேட்பாளர் ஆவார். அதேசமயம், அந்த மாநிலத்தின் இரண்டு மக்களவை தொகுதிகளுக்கு இதுவரை ஒரு வேட்பாளர் கூட மனுத்தாக்கல் செய்ய முன்வராதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக