தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத முன்னாள் மத்திய மந்திரி
ஜாபர்ஷெரீப், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜனதா தளம் (எஸ்) கட்சியில்
இணைய ஆலோசனை நடத்தி வருகிறார்.
தேவேகவுடாவுடன் சந்திப்பு
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ஜாபர்ஷெரீப், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். அவர் பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிட திட்டமிட்டார். ஆனால் அவருக்கு ‘டிக்கெட்’ வழங்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் உள்ள அவர், ஜனதாதளம் (எஸ்) கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக அவர் தேவேகவுடாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவருக்கு மைசூர் தொகுதியை ஒதுக்க அந்தக்கட்சி தயார் என்று கூறப்படுகிறது.
விலக வேண்டாம்
இன்னொருபுறம் ஜாபர்ஷெரீப்பை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். காங்கிரசை விட்டு விலக வேண்டாம் என்று ஷெரீபை கேட்டுக்கொண்டுள்ளனர். இந்தநிலையில், அரசியல் எதிர்காலம் குறித்து ஜாபர்ஷெரீப் தனது ஆதரவாளர்களுடன் பெங்களூரில் நேற்று ஆலோசனை நடத்தினார். காங்கிரசில் நீடிக்கலாமா? அல்லது ஜனதாதளம் (எஸ்) கட்சியில் சேரலாமா? என்று ஆதரவாளர்களிடம் கேட்டார். அதில் பலர் காங்கிரசை விட்டு விலக வேண்டாம் என்று கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
புனித யாத்திரைக்குப்பின்
கூட்டம் முடிந்தபின் ஜாபர்ஷெரீப் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மதசார்பற்ற கட்சிகளை பலப்படுத்த வேண்டியது அவசியம். அந்த நோக்கில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினேன். இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. மெக்கா புனித யாத்திரை சென்று திரும்பிய பிறகு, அடுத்த கட்ட முடிவு குறித்து அறிவிப்பேன்’’ என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக