திங்கள், மார்ச் 17, 2014

20 ஓவர் உலக கோப்பை: ஹாங் காங்கை வீழ்த்தியது நேபாளம்


16 நாடுகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் ’ஏ’ பிரிவின் இரண்டாவது ஆட்டத்தில் 80 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங் காங்கை எளிதாக வென்றது நேபாளம்.


முதலில் ஆடிய நேபாளம் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கியானேந்திரா மல்லா 48 ரன்களும், பராஸ் கட்கா 41 ரன்களும் எடுத்தனர். அடுத்து விளையாடிய ஹாங் காங் அணி 17 ஓவர்களின் முடிவில் 69 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் 80 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளம் அணி வெற்றி பெற்றது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நேபாளம் வீரர் சக்தி கவுசா ஆட்டநாயகன் விருது பெற்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக