5-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் வங்காள தேசத்தில் இன்று தொடங்கியது. முதல் போட்டி குரூப் ‘ஏ’ பிரிவில் வங்காள தேசம் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே மிர்பூரில் நடைபெற்றது.
டாஸ் வென்ற வங்காள தேசம் முதலில் பந்து வீச முடிவு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள், வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மென்களும் வங்காள தேச வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஒற்றை இலக்கு ரன்களில் வெளியேறினர். இதனால் ஆப்கானிஸ்தான் 72 (17.1 ஓவர்) ரன்னில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக குல்படின் நயிப் 21 ரன்கள் எடுத்தார்.
வங்காள தேச அணியில் சிறப்பாக பந்து வீசிய சகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் களமிறங்கிய வங்காள தேசம் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 78 (12 ஓவர்) ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. அனமுல் ஹக்யு அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆட்ட நாயகனாக 3 விக்கெட்டை கைப்பற்றிய சகிப் அல் ஹசன் தேர்வு செய்யப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக