ஞாயிறு, ஜூன் 17, 2012

புதுக்கோட்டை இடைத்தேர்தல் முடிவு: ஓர் ஆண்டு சாதனை – ஜெ!, அ.தி.மு.கவுக்கு பாடம் – விஜயகாந்த் !

சென்னை:புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் வெற்றிப் பெற்றது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெ.ஜெயலலிதா, அதிமுக ஆட்சியின் ஓராண்டு சாதனைகளை, வளர்ச்சித் திட்டங்களை மனதில் நிலை நிறுத்தி கட்சியின் வேட்பாளர் கார்த்திக்
தொண்டைமானை மகத்தான வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் இடைத்தேர்தல் முடிவு அ.இ.அ.தி.மு.கவுக்கு புகட்டிய பாடம் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை இடைத் தேர்தலுக்காக 32 அமைச்சர்கள், 10 மேயர்கள், 100-க்கும் மேற்பட்ட நகராட்சி மன்றத் தலைவர்கள் என்று ஆளுங்கட்சி பரிவாரமே முகாமிட்டனர். முதல்வர் ஜெயலலிதா நேரில் தேர்தல் சுற்றுப்பயணம் செய்தார்.
இந்தச் சுனாமியை எதிர்த்து தேமுதிகவினர் 30,500 (21.3 சதவீதம்) வாக்குகள் பெற்று ஆளும் கட்சியினருக்குச் சரியான பாடம் புகட்டியுள்ளனர். புதுக்கோட்டை வாக்காளர்கள் தேமுதிகவுக்கு டெபாசிட்டை தந்ததோடு அதிக அளவிலும் வாக்குகளை அளித்துள்ளனர். தேமுதிகவுக்கு இனிமேல் இறங்கும் முகம்தான் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் பேசினார்.
ஆனால் மக்கள் தேமுதிகவுக்கு ஏறுமுகம்தான் என்பதையே பதிலாகத் தந்துள்ளனர் என விஜயகாந்த் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக