வெள்ளி, டிசம்பர் 06, 2013

ஹிஸ்புல்லாஹ்வின் மூத்த தலைவர்களில் ஒருவரானர் "ஹஸன் அல் லாகிஸ்" சுட்டுக் கொல்லப்பட்டார்.

லெபனானில் போராளி இயக்கமான ஹிஸ்புல்லாஹ்வின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹஸன் அல் லாகிஸ் சுட்டுக் கொல்லப்பட்டார். காரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது ஹஸன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று லெபனான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தலைநகரமான பெய்ரூத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் செண்ட் தெரஸ் ஹதத் பகுதியில் உள்ள வீட்டின் முன்னால் வைத்து நேற்று முன்தினம் நள்ளிரவில் ஹஸன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. சப்தம் எழுப்பாத நவீன துப்பாக்கி மூலம் தலையில் குண்டு பாய்ந்து அவர் கொல்லப்பட்டுள்ளார். தொழில்முறை கொலையாளிதான் ஹஸனை கொன்றிருப்பர் என கருதப்படுகிறது.பணி முடிந்து திரும்பும்போது இஸ்ரேல் தங்களது சக உறுப்பினரை கொலைச் செய்துள்ளது என்று ஹிஸ்புல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.பல தடவை இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தப்பித்த ஹஸன், தனது வாழ்க்கை முழுவதும் இயக்கத்திற்காக அர்ப்பணித்தார் என்று ஹிஸ்புல்லாஹ் கூறுகிறது.இக்குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுத்துள்ளது. இக்கொலையில் தங்களுக்கு யாதொரு பங்கும் இல்லை என்றும் ஆதாரங்களும், உண்மைகளும் இல்லாத வெறுமொரு குற்றச்சாட்டு என்றும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யிகல் பால்மோர் தெரிவித்துள்ளார்.2006-ஆம் ஆண்டு ஒரு மாதத்திற்கும் மேலாக நீண்ட ஹிஸ்புல்லாஹ்-இஸ்ரேல் போரின் போது ஹஸனின் மகன் கொல்லப்பட்டிருந்தார்.கடந்த மாதம் ஈரான் தூதரககத்திற்கு  முன்பு நடந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஹிஸ்புல்லாஹ்வின் உயர் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் குற்றம் சாட்டியிருந்தார்.1992-ஆம் ஆண்டு முதல் பல்வேறு ஹிஸ்புல்லாஹ்வின் மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இக்கொலைகளின் பின்னணியில் இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாத் என்று குற்றச்சாட்டு உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக