வெள்ளி, டிசம்பர் 20, 2013

குஜராத் இனப்படுகொலையை சீக்கியர் கூட்டுப் படுகொலையுடன் ஒப்பிடக்கூடாது: அமர்த்தியா சென்!

புதுடெல்லி: 2002-ஆம் ஆண்டு குஜராத் இனப்படுகொலையை 1984-ஆம் ஆண்டு நிகழ்ந்த சீக்கியர்கள் கூட்டுப் படுகொலையுடன் ஒப்பிடக்கூடாது என்று நோபல் விருது பெற்றவரும், பொருளாதார நிபுணருமான அமர்த்தியா சென் தெரிவித்தார்.

என்.டி.டி.விக்கு அளித்த நேர்முகத்தில் அமர்த்தியா சென் கூறியது: பிரதமராவதற்கு குஜராத் இனப்படுகொலை மோடிக்கு தடையாக இருக்காது என்று கூறிய இன்ஃபோஸிஸ் தலைவர் நாராயண மூர்த்தியின் கருத்தை நிராகரித்தார் அமர்த்தியா சென்.

சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் குற்றவாளிகளை நீதிக்கு முன் கொண்டு வராதது அவமானகரமானது. ஆனால், இச்சம்பவத்தையும், மோடி குஜராத்தில் முதல்வராக இருக்கும்போது நிகழ்ந்த இனப்படுகொலையையும் இரண்டாக காண வேண்டும்.

மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பங்கில்லை. ஆனால், மோடி முதல்வராக இருக்கும்போதுதான் குஜராத்தில் இனப்படுகொலை நிகழ்ந்தது. குஜராத்தில் முஸ்லிம்கள் 2-ஆம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றார்கள். காங்கிரஸ் எதிர்ப்பு அலையே சட்டப்பேரவை தேர்தல்களில் எதிரொலித்தது.

இவ்வாறு அமர்த்தியா சென் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக