புதுடெல்லி: பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்கை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். இதனால் பா.ஜ.க.-ம.தி.மு.க. கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பின், அவர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மேலும் 5 மாநிலங்களிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து, 4 மாநில தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இதனால் அரசியல் கட்சிகளின் பார்வை பா.ஜ.க. மீது திரும்பியுள்ளது.
தமிழ் நாட்டில் பா.ஜனதா, முக்கிய அரசியல் கட்சிகளை தனது கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளை சேர்க்கும் முயற்சியில் தமிழருவி மணியன் இறங்கியுள்ளார். ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவும், மோடி பிரதமர் ஆவதற்குரிய ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறது என்றும் சமீபத்தில் கூறி இருந்தார். இந்த நிலையில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ டெல்லி சென்றார். அங்கு பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங்கை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது பா.ஜ.க.வுடன், ம.தி.மு.க. கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்தாக கூறப்படுகிறது. மேலும், தமிழ் நாட்டின் அரசியல் நிலமை, எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் தமிழ்நாட்டில் அதிக இடங்களை பிடிக்க முடியும் என்பது குறித்தும் இருவரும் பேச்சு வார்த்தை நடத்தியதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக