ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான ஆள் இல்லா உளவு விமானம் விபத்துக்குள்ளானது.ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். பருந்து விமான தளம் இயங்கி வருகிறது. தமிழக கடலோர பகுதிகளில் அந்நியர் ஊடுருவலை கண்காணிக்கவும், ஆபத்துகளில் சிக்கும் மீனவர்களை மீட்கவும் இங்குள்ள கடற்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் குட்டி விமானங்கள் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில், கடந்த ஆண்டு பருந்து கடற்படை விமான தளத்தில் ஆள் இல்லா உளவு விமானம் புதிதாக சேர்க்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக உச்சிப்புளி கடற்படை விமான தளத்தில் இருந்து ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஹெலிகாப்டர்கள் நடுவழியில் பழுதடைந்த நிகழ்வுகள் நடந்தன.
ஹெலிகாப்டர்கள் பழுதடைந்து வரும் காரணம் கண்டறியப்படும் முன்னரே ரோந்து பணியில் ஈடுபட்ட ஆள் இல்லா உளவு விமானம் இன்று விபத்தில் சிக்கியது.இன்று காலை உச்சிப்புளி பருந்து கடற்படை விமான தளத்தில் இருந்து ஆள் இல்லா உளவு விமானம வழக்கம் போல் ரோந்து பணிக்கு சென்றது. ரோந்து பணி முடிந்து மாலை கடற்படை விமான தளத்திற்கு திரும்பி கொண்டிருந்தபோது அது திடீரென விபத்தில் சிக்கியது. விமான தளத்தின் அருகே உள்ள உசிலங்காட்டுவலசை என்ற கிராமத்தின் மேல் பறந்து கொண்டிருந்த அந்த உளவு விமானம் திடீரென செயல் இழந்தது. செயல் இழந்த விமானம் அப்பகுயில் உள்ள பனைமரம் ஒன்றில் மீது விழுந்து நொருங்கியது. பனைமரத்தில் விழுந்ததால் அருகாமையில் இருந்த வீடுகளுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை.இன்று காலை உச்சிப்புளி பருந்து கடற்படை விமான தளத்தில் இருந்து ஆள் இல்லா உளவு விமானம வழக்கம் போல் ரோந்து பணிக்கு சென்றது. ரோந்து பணி முடிந்து மாலை கடற்படை விமான தளத்திற்கு திரும்பி கொண்டிருந்தபோது அது திடீரென விபத்தில் சிக்கியது. விமான தளத்தின் அருகே உள்ள உசிலங்காட்டுவலசை என்ற கிராமத்தின் மேல் பறந்து கொண்டிருந்த அந்த உளவு விமானம் திடீரென செயல் இழந்தது. செயல் இழந்த விமானம் அப்பகுயில் உள்ள பனைமரம் ஒன்றில் மீது விழுந்து நொருங்கியது. பனைமரத்தில் விழுந்ததால் அருகாமையில் இருந்த வீடுகளுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்து பருந்து கடற்படை தளத்தை சேர்ந்த அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு சென்று சேதமடைந்த உளவு விமானத்தின் பாகங்களை சேகரித்து எடுத்து சென்றனர். இந்திய கடற்படையின் ரோந்து பணிகளில் முக்கிய பங்கு வகித்த ஆள் இல்லா உளவு விமானம் விபத்துக்குள்ளானது கடற்படையினரிடையே அதிர்சியை ஏற்படுதியுள்ளது.
இந்த விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என பருந்து விமான தளத்தின் அதிகாரி அபிஜித் பார்க்கர்டாக்கி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக