வெள்ளி, டிசம்பர் 20, 2013

கூட்டணியில் சர்வாதிகரமே சிறந்தது : மு.க. ஸ்டாலின்

சென்னை: கூட்டணி விவகாரங்களில் ஜெயலலிதாவைப் போன்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்கிற சர்வாதிகாரத் தோரணையை தி.மு.க தலைவர் கருணாநிதியும் மேற்கொள்ள வேண்டும் என்றும், இழுத்துப் பறித்துக்கொண்டிருக்கக் கூடாது என்றும் அறிவுரையை அரிவுரையாக வழங்கியுள்ளார்  தி.மு.க பொருளாளர் மு.க ஸ்டாலின்.

தி.மு.க பொதுக்குழுவில் பேசிய ஸ்டாலின்,  "அங்கே, அ.தி.மு.க-வில் ஜெயலலிதா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதுபோல நாமும் சர்வாதிகாரமாக நடந்துகொள்ள வேண்டும்" என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
ஸ்டாலின் தொடர்ந்து பேசுகையில் "  தலைவர் (கருணாநிதி) ஜனநாயகவாதியாக இருக்கட்டும். தேர்தல் சமயத்திலாவது அவர் (ஜெயலலிதா போல) சர்வாதிகாரியாக இருக்க வேண்டும். கூட்டணியைப் பத்தி பேச 10 நாள், சீட் எண்ணிக்கையை பேச 10 நாள், தொகுதியை அடையாளம் காண 10 நாள்னு இழுத்துக் கொண்டே இருப்பதெல்லாம் கூடாது.
ஜெயலலிதா மாதிரி சர்வாதிகாரமாக கூட்டணிக் கட்சிகளைக் கையாள வேண்டும். கொடுக்கிறதை ஏற்றுக் கொண்டால் கூட்டணி, இல்லை எனில் இல்லை என்பதுதான் ஜெயலலிதா பாணி. அதனால்தான் ஆட்சிக்கு வந்தாலும் ஜெயலலிதா பெரும்பான்மையாக உட்காருகிறார். எதிர்க்கட்சியாக இருந்தாலும் அசுர பலத்துடன் இருக்கிறார்" என்று பேசி சக தி.மு.க உறுப்பினர்களை வியக்க வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக