ஜோஹன்னஸ்பர்க், தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (95) காலமானார்.நெல்சன் மண்டேலா 1918 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். தென் ஆப்பிரிக்க வரலாற்றில் அதிபராக பதவியேற்ற முதல் கறுப்பினத் தலைவர் மண்டேலா என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்தாண்டுகள் மட்டும் அதிபராக பதவி வகித்த மண்டேலா, அதன் பின்னர் பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெற்று, தனது சொந்த கிராமமான குனு-வில் ஓய்வெடுத்து வந்தார்.2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் உலக கால்பந்து போட்டி நடந்தபோது, கடைசி முறையாக பொது இடத்தில் தோன்றிய அவர், பூரண ஓய்வில் இருந்துவந்தார். அவரது உடல் நிலை குறித்து ராணுவ மருத்துவர்கள் அடிக்கடி சோதனை நடத்தி வைத்தியம் அளித்து வந்தனர். கடந்த ஆண்டு மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் நலமடைந்து வீடு திரும்பினார்.கடந்த ஆண்டு ஜூலை 18ம் தேதி, 94வது பிறந்த நாளை கொண்டாடிய மண்டேலாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. டிசம்பர் மாதம் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார். அதன்பின்னர் தொடர்ந்து ஓய்வெடுத்த அவர், நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 8-ந்தேதி பிரிட்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பினார்.இந்நிலையில், அவர் இன்று காலை மரணம் அடைந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக