மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விசாரணை தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம், நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. 15 உறுப்பு நாடுகளும் கலந்து கொண்டன.
இதில், ‘சர்வதேச விமான போக்குவரத்தின் வழிகாட்டலின்படி, மலேசிய விமான தாக்குதல் தொடர்பாக முழுமையான, சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். விமானம் விழுந்த இடத்துக்கு செல்ல, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாடுகள் விதித்திருப்பது வருத்தம் அளிக்கிறது. விமானம் விழுந்த இடத்தை சுற்றிலும், ஆயுத தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்த சம்பவத்துக்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆஸ்திரேலியா கொண்டு வந்த இந்த தீர்மானத்தை ஒரு சில திருத்தங்களுடன், ரஷ்யா ஆதரித்து வாக்களித்தது. இது குறித்து ஐநா.வுக்கான ரஷ்ய பிரதிநிதி விடாலி சர்கின் கூறுகையில் “விரைவான மற்றும் முழுமையான விசாரணை நடத்துவதற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். கருப்பு பெட்டிகள் விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதுபோன்று, உண்மை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும்.“ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக