புதன், ஜூலை 30, 2014

’தமிழகச் சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு’ - கலைஞர் கண்டன பொதுக்கூட்டம்

தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர், ஜெ. அன்பழகன், எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை :

’’ திமுக தலைவர் கலைஞர் தலைமையில் 22-7-2014, செவ்வாய்க்கிழமை, மாலை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற தி.மு. கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கிணங்க;  தென்சென்னை மாவட்ட தி.மு.க.வின் சார்பில் 31-7-2014 வியாழன் அன்று மாலை 6 மணியளவில் முத்தமிழறிஞர்  கலைஞர்  சிறப்புரையாற்றும் “தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு” எனும் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் சென்னை, தியாகராய நகர் பேருந்துநிலையம் அருகில் நடைபெறுகிறது.
இப்பொதுக்கூட்டத்தில் கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றுகிறார்கள்.

தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் ஜெ. அன்பழகன், எம்.எல்.ஏ., தலைமையில் பகுதிச் செயலாளர் கே.ஏழுமலை, பகுதி  “தமிழகச் சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு”  தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் 31-7-2014அன்று சென்னை, தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகில் தலைவர் கலைஞர் அ சிறப்புரையாற்றும் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் கழகத் தோழர்கள் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொள்ள தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் ஜெ.அன்பழகன், எம்.எல்.ஏ., வேண்டுகோள்!இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் ஜெ.கருணாநிதி வரவேற்புரையாற்றிட,கூட்டத்தின் முடிவில் வட்டக் கழகச் செயலாளர்கள் கோ.உதயசூரியன் நன்றியுரையாற்றுகிறார்.
தென்சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், - பகுதிக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்டக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகப் பிரதிநிதிகள், வட்டக் கழக நிர்வாகிகள், இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, வழக்கறிஞர் அணி, இலக்கிய அணி, தொண்டர் அணி, தொழிலாளர் அணி, மீனவர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, கலை - இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை ஆகிய அனைத்து அணிகளின் மாவட்ட, பகுதி அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள்- நிர்வாகிகள், சார்பு மன்றங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் என பல்லாயிரக் கணக்கில் பெருந்திரளாக இக்கண்டனக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.’’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக