வடமாநிலங்களில் தக்காளி விலை கடந்த ஒரு வாரத்தில் 2 மடங்கு உயர்ந்துள்ளது.
மும்பை, டெல்லியில் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.40 ஆக இருந்தது. தற்போது சில்லறை விலையில் தக்காளி கிலோ ரூ.80–க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடுமையான மழையால் உற்பத்தி செய்வதில் ஏற்பட்ட பாதிப்பால் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. இமாச்சலபிரதேசத்தில் உள்ள சிம்லாவில் கடுமையான மழையால் அதிகமாக உற்பத்தி செய்ய இயலவில்லை.
தக்காளி விலையின் இந்த அதிரடி உயர்வால் பொது மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக