திங்கள், ஜூலை 14, 2014

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் மக்கள் விரோத போக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம்

தேசிய ஜனநாயக கூட்டணியின் பொருளாதார கொள்கைகள் மற்றும் அறிவிப்புகள் இந்த அரசு ஐக்கிய முற்போக்கு கூட்டணியை விட மோசமாக உள்ளது என்பதை காட்டுகிறது என்று கோழிக்கோட்டில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு தெரிவித்துள்ளது.
புதிய அரசின் செயல்பாடுகள் அது முந்தைய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை விட்டும் மாறாது என்பதையும் இன்னும் அதிகமாக இந்த விரோத போக்கை மேற்கொள்ளும் என்பதையும் காட்டுகின்றன. அடிப்படை பொருட்களின் விலையேற்றம், ரயில் கட்டண ஏற்றம், ஊடகங்கள் மற்றும் பாதுகாப்பு துறைகளில் நூறு சதவிகித அந்திய முதலீடு ஆகியவற்றைதான் இந்த ஒரு மாதத்தில் அவர்கள் வழங்கியுள்ளனர். வலதுசாரிகளின் பிரச்சாரம் ஏற்படுத்திய சாத்தியமில்லாத வாக்குறுதிகளை நம்பி ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிராக வாக்களித்த மக்கள் தாங்கள் தெளிவாக ஏமாற்றப்பட்டுள்ளதை மெதுவாக உணர ஆரம்பித்துள்ளனர். இந்த நாசகர தாராளமயமாக்கலை எதிர்க்குமாறு மக்களை இந்த செயற்குழு கேட்டுக்கொண்டது.
மகாத்மா காந்தி படுகொலையை தொடர்ந்து நடத்தப்பட்ட கேபினட் கூட்டத்தின் விபரங்கள் உள்ளிட்ட 150000 வரலாற்று கோப்புகள் உள்துறை அமைச்சகத்தால் தூய்மை படுத்தும் பணியின் கீழ் அழிக்கப்பட்டதாக வந்துள்ள செய்தி குறித்து செயற்குழுவின் மற்றொரு தீர்மானம் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது. மகாத்மா காந்தி படுகொலை போன்ற தேச விரோத செயல்களின் அதிகாரப்பூர்வ ஆதாரங்களை அழிக்கும் போக்கு இது என்ற நோக்கர்களின் கருத்தை இந்த செயற்குழு ஏற்றுக்கொள்கிறது. இது போன்ற முயற்சிகளுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று பாப்புலர் ஃபரண்ட் கேட்டுக் கொள்கிறது.
காஸாவில் ஃபலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்தி வரும் வான் தாக்குதல்களை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. தங்களின் தாய்நாட்டிற்காக போராடி வரும் ஃபலஸ்தீன மக்களுக்கு தங்களின் ஆதரவினை தெரிவித்து கொள்கிறது.
நடப்பு கல்வியாண்டில் ஏழை மற்றும் தகுதியுடைய மாணவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு கல்வி உதவி தொகையை தொடர்ந்து வழங்கும். இயக்கத்தின் சமூக மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு ஒரு கோடி ரூபாய்க்கு உதவித் தொகை வழங்க தேசிய செயற்குழு தீர்மானித்துள்ளது.
இந்த கூட்டத்திற்கு தேசிய தலைவர் கே.எம்.ஷரீஃப் அவர்கள் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஓ.எம்.ஏ.ஸலாம், செயலாளர்கள் முகம்மது அலி ஜின்னா, இல்யாஸ் தும்பே,கேரளா மாநில தலைவர் கரமண அஷ்ரஃப் மௌலவி, தமிழ்நாடு மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில், கர்நாடகா மாநில தலைவர் வாஹித் சேட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக