லார்ட்ஸ் மைதானத்தில் 28 ஆண்டுக்கு பிறகு இந்திய அணி வெற்றி பெற்றது. இதற்கு காரணமான 5 வீரர்கள் வருமாறு:–
இஷாந்த்சர்மா: தனது அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்து அணியை திணறடித்தார். 74 ரன் கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
இதன்மூலம் அவர் விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 4–வது இன்னிங்சில் சிறப்பாக பந்து வீசிய இந்தியர் ஆவார். இதற்கு முன்பு ஸ்ரீநாத் 4–வது இன்னிங்சில் 21 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றியதே சிறந்ததாக இருந்தது.
புவனேஸ்வர்குமார்: இந்த டெஸ்டில் புவனேஸ்குமார் ஆல்ரவுண்டராக திகழ்ந்தார். முதல் இன்னிங்சில் 82 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். பேட்டிங்கில் முதல் இன்னிங்சில் 36 ரன்னும், 2–வது இன்னிங்சில் இக்கட்டான நிலையில் 52 ரன்னும் எடுத்து அவரது பணியும் சிறப்பாக இருந்தது.
ரகானே: முதல் இன்னிங்சில் ‘சதம்’ அடித்து (103 ரன்) அணியை காப்பாற்றினார். இவரது ஆட்டத்தால்தான் இந்திய அணி முதல் இன்னிங்கில் 295 ரன்கள் குவித்து இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்க முடிந்தது.
முரளி விஜய்: தொடக்க வீரரான முரளிவிஜய் 2–வது இன்னிங்சில் அபாரமாக விளையாடி ரன்கள் குவிக்க காரணமாக இருந்தார். முதல் டெஸ்டில் சதம் அடித்த அவர் இந்த டெஸ்டின் 2–வது இன்னிங்சில் 247 பந்துகளில் 95 ரன் எடுத்து அணியின் வெற்றிக்கு பங்கு வகித்தார்.
ஜடேஜா: தனது பேட்டிங் மூலம் அணிக்கு சிறப்பாக செயல்படவில்லை என்ற விமர்சனம் ரவீந்திர ஜடேஜாவுக்கு இருந்தது. அதை அவர் லார்ட்ஸ் டெஸ்டில் போக்கினார். 2–வது இன்னிங்சில் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டார். 57 பந்தில் 68 ரன்கள் எடுத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக