சனி, ஜூலை 12, 2014

தேசிய அளவிலான திட்டங்கள் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் பெயரில்

சுதந்திர போராட்ட தலைவர்களை புறக்கணித்துவிட்டு ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் பெயர்களை சிறப்புத் திட்டங்களுக்கு மோடி அரசு சூட்டியுள்ளது.மோடி அரசின் முதல் பட்ஜெட்டில் சுதந்திரப்போராட்ட வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.


பா.ஜ.கவின் முந்தைய வடிவமான பாரதீய ஜனசங்கத்தின் ஸ்தாபகர் சியாம பிரசாத் முகர்ஜி, ஜனசங்கத்தின் பொதுச் செயலாளரும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவருமான தீன் தயாள் உபாத்யாயா ஆகியோரின் பெயரில் பல திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.சில முந்தைய திட்டங்களுக்கு பெயர்களை மாற்றிவிட்டு ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.ராஜீவ்காந்தி கிராம மின்சார திட்டத்தின் பெயரை நீக்கி விட்டு தீன் தயாள் உபாத்யாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.தீன் தயாள் உபாத்யாயா கிராம ஜோதி யோஜனா திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடுச் செய்யப்பட்டுள்ளது.
சியாமபிரசாத் முகர்ஜியின் பெயரிலான சாலை வளர்ச்சித் திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடுச் செய்யப்பட்டுள்ளது.சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை தேர்ந்தெடுப்பதிலும் அருண்ஜெட்லி சங்க்பரிவார ஆதரவாளர்களையே தேர்வுச் செய்துள்ளார்.அவர்கள் பண்டிட் மதன் மோகன் மாளவியா, சர்தார் வல்லபாய் படேல் ஆகியோர் ஆவர்.182 மீட்டர் உயரம் கொண்ட வல்லபாய் படேல் சிலை நிறுவ ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால், பெண் பாதுகாப்பிற்காக வெறும் ரூ.150 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் தலைவராக இருந்தபோதிலும் இந்துத்துவ வகுப்புவாத கொள்கைகளுக்கு வழிகாட்டுதல் வழங்கிய மதன்மோகன் மாளவியாவின் பெயரில் ஆசிரியர் பயிற்சி திட்டம் நடைமுறைப்படுத்தப்போவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக