வியாழன், ஜூலை 31, 2014

தொடரும் யூத பயங்கரவாதம் கண்டுகொள்ளாத ஐ.நா. சபை : பலி எண்ணிக்கை 1,321 ஆக உயர்

காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் கடல்வழி, வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களில் நேற்று மட்டும் 90 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 260-க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்தனர்.
கான் யூனிஸ் நகரின் பிரபல வர்த்தகப் பகுதி மீது இஸ்ரேல் யூத பயங்கரவாதிகள்  நடத்திய ஆவேச தாக்குதலில் 15 பேர் பலியாகினர். 150-க்கு அதிகமானோர் காயமடைந்தனர். வடக்கு காஸாவின் ஜபாலியா பகுதியில் ஐ.நா.சபை நடத்தி வரும் பெண்கள் துவக்கப் பள்ளியில் வீடிழந்த சுமார் மூவாயிரம் பாலஸ்தீனியர்கள் அகதிகளாக  தஞ்சமடைந்துள்ளனர் 

இந்த பள்ளி மீது இஸ்ரேல்  யூத பயங்கரவாதிகள்  பீரங்கி தாங்கிய வாகனங்கள் நடத்திய ஈவிரக்கமற்ற தாக்குதலில் குழந்தைகள் உள்பட 20 பேர் பலியாகினர். 90-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். 

இந்த தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கையும் சேர்த்து கடந்த 24 நாட்களாக காஸா பகுதி மீது இஸ்ரேல் யூத பயங்கரவாதிகள்  நடத்தி வரும் தாக்குதல்களில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 1,321 ஆக உயர்ந்துள்ளது. 

பலியானவர்கள் மற்றும் காயமடைந்த சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களில் அப்பாவி குழந்தைகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகம் என மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக