சனி, ஜூலை 19, 2014

காசா தாக்குதல் பற்றி விவாதிக்க மறுப்பு: எதிர்க்கட்சிகள் அமளியால் மேல்–சபை ஒத்திவைப்பு

பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவது பற்றி விவாதிக்க வேண்டும் என்று டெல்லி மேல்–சபையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகிறது.

ஆனால் சபையில் விவாதம் நடத்த அனுமதிக்க கூடாது என்று வெளியுறவு மந்திரி சுஷ்மாசுவராஜ் மேல்–சபை தலைவர் அன்சாரிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால் மேல்– சபை நிகழ்ச்சி நிரலில் காசா பிரச்சினை இடம் பெறவில்லை. இதையடுத்து கடந்த 2 நாட்களாக மேல்– சபையில் எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு மேல்–சபை கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காசா பிரச்சினை பற்றி விவாதிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். இதற்கு மறுத்ததால் அமளி ஏற்பட்டு சபை 15 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது.

அதன் பிறகு சபை கூடியதும் மீண்டும் இதே பிரச்சினையால் அமளி ஏற்பட்டது. இதையடுத்து 12 மணி வரையும் அதன் பிறகு பிற்பகல் 2.30 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக