வெள்ளி, ஜூலை 04, 2014

மியான்மரில் மீண்டும் முஸ்லிம்கள் மீது புத்த தீவிரவாதிகள் தாக்குதல்!

மியன்மாரின் (பர்மா) இரண்டாவது பெரிய நகரான மண்டலேயில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகளும், ஒரு மஸ்ஜிதும் புத்த தீவிரவாத்களால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளன.

சுமார் 500க்கும் மேற்பட்ட புத்த தீவிரவாதிகள், மூங்கில் கட்டைகள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் தாக்க முயன்றதை போலிசார் தடுத்தனர். முஸ்லிம் ஒருவர் சுடப்பட்டார் என்றும், மூன்று புத்தர்கள் காயமடைந்தனர் என்றும் உள்ளூர் செய்திகள் கூறுகின்றன.
இந்நிலையில் ஒரு புத்தமதத்தைச் சேர்ந்த ஒரு ஆணை முஸ்லீம் ஆண்களின் கும்பல் ஒன்று கத்தியால் வெட்டிச் சாய்த்ததாகவும், அதற்கு சில மணிநேரம் கழித்து காலைத்தொழுகைக்கு சென்றுகொண்டிருந்த முஸ்லீம் ஒருவர் கொல்லப்பட்டார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பர்மாவின் மேற்குப் புற மாகாணமான ராக்கேன் மாகாணத்தில், கடந்த மூன்றாண்டுகளாகவே, பெரும்பான்மை புத்த தீவிரவாதிகள் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினர் மீது வகுப்புவாத வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த மோதல்களில் 2012ம் ஆண்டில் மட்டும், ராக்கேன் மாகாணத்தில் குறைந்தது 200 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக