வியாழன், ஜூலை 17, 2014

இஸ்ரேல் தாக்குதல்: மோடி எச்சரிக்கை

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ‘பிரிக்ஸ்’ மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து ஓர் அறிக்கை வெளியிட்டார். 
அதில் அவர் கூறி இருப்பதாவது:- 

மேற்கு ஆசியாவில் ஸ்திரமற்ற தன்மை உருவாகி வருவது கவலை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட நாடுகளை நாம் தொடர்ந்து வெறுமனே வேடிக்கை பார்ப்பது கடுமையான பின்விளைவுகளை உருவாக்கும். 

இந்த மோதல், உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும். ஈராக்கில் நடந்து வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வர நாம் கூட்டாக என்ன செய்யலாம் என்று ‘பிரிக்ஸ்’ நாடுகள் ஆராய வேண்டும். வளைகுடாநாடுகளில் வாழும் 70 லட்சம் இந்தியர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவதால், இந்தியா குறிப்பாக கவலைப்படுகிறது. 

அமைதி முயற்சிகளில் இந்தியாவும் பங்கெடுக்க தயாராக உள்ளது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக