திங்கள், ஜூலை 14, 2014

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: இரண்டு பா.ஜ.க எம்.பி.க்களுக்கு பிடிவாரண்ட்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு அங்குள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேர் நீண்ட காலமாக விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவர்கள் அனைவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வாறு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டவர்களில் பா.ஜ.க. எம்.பி.க்கள் இருவர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உன்னாவ் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சாக்சி மகாராஜ், கைசர்கஞ்ச் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் ஷரன், அமர்நாத் கோயல், ஜெய் பகதூர் கோயல், ராமச்சந்திர கத்ரி மற்றும் பவன் பாண்டே ஆகியோருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் பவன் பாண்டே கடந்த பாராளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சுல்தான்பூர் தொகுதியில் வருண் காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோற்றவர் ஆவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக