வியாழன், ஜூலை 31, 2014

புனே அருகே நிலச்சரிவு: 5 பேர் பலி

 புனே அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கனக்கானோர் நிலச்சரிவு ஏற்பட்ட வீடுகளில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அம்பேகான் என்ற மலைக் கிராமத்தில்  இன்று காலை பெரும் மழைப்பெய்தது. இதன்காரணமாக அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மழையால் சேறு நிறைந்து இருந்த பகுதிகளில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் 40வீடுகள் சேற்றில் புதைந்தன.
இந்த விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கனக்கான மக்கள் அந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுவருகின்றனர்.மீட்புபணியில் 42   வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், தொடர்மழைக்காரணமாக சாலைகள் மிகமோசமான நிலையில் உள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்வது பெரும் சிரமம் ஏற்பட்டதாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் டிஐஜி  எஸ்எஸ். கௌலேரியா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக