பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜ அரசின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் விலைவாசி உயர்வு, மக்களவை எதிர்கட்சி தலைவர் பதவி உட்பட பல பிரச்னைகளை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. முந்தைய ஐ.மு கூட்டணி அரசு கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டின் காலம் இம்மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்பாக புதிய அரசு பொது பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா ரயில்வே பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார். இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் பொருளாதார ஆய்வறிக்கையையும் 10ம் தேதி பொதுபட்ஜெட்டையும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட்டுக்கு முன்பே ரயில் கட்டணம், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு விட்டன. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ள பிரச்னை, மக்களவை எதிர்கட்சி தலைவர் பதவி பிரச்னை ஆகியவற்றை எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக