செவ்வாய், ஜூலை 22, 2014

பேராக்கில் புகைமூட்டம்: பள்ளிகள் மூடப்படுகின்றன

பேராக், சித்தியவான் மாவட்டத்தில் கடுமையான புகைமூட்டம் நிலவுவதால் அங்குள்ள பல பள்ளிகள் மூடப்படுகின்றன.
இன்று மதியம் 1.10 நிலவரப்படி, சித்தியவான் பகுதிகளின் காற்றுத் தூய்மைக்கேட்டின் அளவு 239-ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலையில் IPU எனும் காற்றுத் தூய்மைக்கேடு 250-ஆகப் பதிவாகியுள்ளது.

மோசமான காற்றுத் தூய்மைக்கேடு காரணமாக 5959 மாணவர்கள் 427 ஆசிரியர்களை உள்ளடக்கியப் பள்ளிகள் மூடப்படுகின்றன. விடுமுறை வழங்கப்படும் எல்லாப் பள்ளிகளும், பள்ளி நாட்களில் ஈடுசெய்யப்படும். சம்பந்தப்பட்ட இடங்களின் காற்றுத் தூய்மையில் முன்னேற்றம் ஏற்படும் வரையில் பள்ளிகள் மூடப்படும்.

மொத்தம் 6 ஆரம்பப்பள்ளிகளும் 9 இடைநிலைப் பள்ளிகளும் மூடப்படுகின்றன. நாளை முதல் மூடப்படும் பள்ளிகளின் விபரம் பின்வருமாறு:

ஆரம்பப் பள்ளிகள்:
தேசிய மாதிரி ஶ்ரீ மஞ்சோங்
தேசிய மாதிரி டத்தோ ஶ்ரீ கமாருடின்
தேசிய மாதிரி மெத்தடிஸ் ஏசிஎஸ்
தேசிய மாதிரி மெத்தடிஸ்
தேசிய மாதிரி கான்வென்ட்
தேசிய மாதிரி சிம்பாங் அம்பாட்

இடைநிலைப்பள்ளிகள்
SMK ஶ்ரீ மஞ்சோங்
SMK அஹ்மாட் போஸ்தாமான்
SMK ஶ்ரீ சமுத்ரா
SMK நான் ஹ்வா
SMK ஆயர்தாவார் மெத்தடிஸ்
SMK ஏசிஎஸ் சித்தியவான்
SMK தொக் பெர்டானா
SMK அம்புரோஸ்

SMK டத்தோ இட்ரிஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக