ஞாயிறு, டிசம்பர் 18, 2011

தீவிரவாதத்தை தூண்டும் நூல்களின் பட்டியலில் பகவத் கீதை: ரஷ்யாவில் தடைச் செய்யப்படுமா?


மாஸ்கோ:ஹிந்துக்களின் புனித நூலாக கருதப்படும் பகவத்கீதை ரஷ்யாவில் தடைச்செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது தீவிரவாதத்தை தூண்டும் நூல்களின் பட்டியலில் பகவத் கீதையை சேர்த்து அதனை தடைவிக்க முயற்சி நடைபெறுகிறது. இதுத்தொடர்பாக இறுதி தீர்ப்பு திங்கள் கிழமை நீதிமன்றம் வெளியிடும்.பகவத் கீதையின் ரஷ்ய மொழிப்பெயர்ப்பை தடைச்செய்யக் கோரி டாம்ஸ்க் சிட்டி நீதிமன்றத்தில் கடந்த ஜுன் மாதம் முதல் வழக்கு நடைபெற்று வருகிறது.

பகவத் கீதையை தடைச்செய்யும் முயற்சியில் தலையிட பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ரஷ்யாவில் வாழும் ஹிந்து சமூகம் முறையிட்டுள்ளது. பகவத் கீதையை விரிவாக பரிசோதிக்க நீதிமன்றம் டாம்ஸ்க் மாநில பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டது.
பல்கலைக்கழகம், பகவத் கீதையின் உள்ளடக்கத்திற்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளது.

1 கருத்து:

  1. இறைவனை அடையவழி காட்டினால், இறைவனை விட்டுவிட்டு வழிகாட்டிகளை கடவுளாக்கி விட்டனர்! இன்றைய உலகின் ஒரே பிரச்சினை இது தானே! மதவாதம்தானே! எல்லா மகான்களும் இறைவனைத்தானே காண, அடைய வழிகாட்டினார்!
    http://sagakalvi.blogspot.com/2011/12/blog-post_21.html

    பதிலளிநீக்கு