வியாழன், டிசம்பர் 22, 2011

பாகிஸ்தானில் நிலவும் அரசியல் சூழல் குறித்து பிரதமர் கிலானியுடன் ஸர்தாரி பேச்சுவார்த்தை


பாகிஸ்தானில் நிலவும் அரசியல் சூழல் குறித்து அந்நாட்டு ஜனாதிபதி ஆசிப் அலி ஸர்தாரியும், பிரதமர் யூசுப் ரஸீல் கிலானியும் பேச்சுவார்த்தை நடத்தினர்.கராச்சியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சியான அவாமி தேசிய கட்சியின் தலைவர் அஸ்ஃபாந்த்யர் வாலிகன், சிந்து மாகாண முதல்வர் காயிம் அலி ஷா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டம் சில மணி நேரம் நடைபெற்றது. இதில் முழுக்க முழுக்க நாட்டில் நிலவும் அரசியல் சூழல் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது. குறிப்பாக சமீபகாலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கப்பட்டதாக ஜனாதிபதி அலுவலக செய்தித் தொடர்பாளர் ஃபர்கதுல்லா பாபர் குறிப்பிட்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு முன்னதாக நாட்டின் அரசியல் சூழல் குறித்து உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக்கை அழைத்து ஸர்தாரி விவாதித்தார். அப்போது நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஸர்தாரியிடம் ரெஹ்மான் மாலிக் விளக்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக