வெள்ளி, டிசம்பர் 23, 2011

சிறுபான்மையினருக்கு 4.5% இட ஒதுக்கீடு! மத்திய அரசு முடிவு


புதுடில்லி: நாட்டில் மிகவும் பின்தங்கியுள்ள சிறுபான்மை சமுதாயத்தினரை முன்னேற்றும் விதமாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில், 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டை சிறுபான்மையினருக்கு வழங்க, மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. தலைநகர் புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்,
நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், 4.5 சதவீதத்தை சிறுபான்மையினருக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், இந்த ஒதுக்கீடு சலுகையை அவர்கள் பெறலாம். சிறுபான்மையினராகிய முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சிகள் இந்த சலுகையைப் பெறுவர்.
இந்த இட ஒதுக்கீடு விரைவில் மத்திய அரசின் உத்தரவு மூலம் உடனடி அமலுக்கு வரும். மதம் மற்றும் மொழி அடிப்படையிலான சிறுபான்மையினருக்கான தேசிய கமிஷன் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த இட ஒதுக்கீடு முடிவை, மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது. நேற்று மத்திய அமைச்சரவையில், ஏக மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ள, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஜாதியினர், இந்த இட ஒதுக்கீட்டால் பலன் பெறுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக