வெள்ளி, டிசம்பர் 23, 2011

முட்டை விலை இதுவரையில்லாத உச்சத்தைத் தொட்டு, அசைவ உணவு பிரியர்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது !

நாமக்கல் மொத்த விலை சந்தையில் நேற்று முன்தினம் 2 ரூபாய் 97 காசுக்கு விற்ற முட்டையின் விலை நேற்று 16 காசு உயர்ந்து 3 ரூபாய் 13 காசு என்ற அளவில் விற்பனையாகிறது. வட மாநிலங்களில் நிலவும் கடுமையான குளிராலும், கேரளாவில் முட்டைக்கு அதிக தேவை இருப்பதுமே இந்த உயர்வுக்கு
காரணமாகச் சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம், 3 ரூபாய் 1 காசாக இருந்ததுதான் இதன் அதிக பட்ச விலையாக இருந்தது. மொத்த விலை தீர்மானிக்கப்படும் நாமக்கல்லிலேயே இந்த விலை என்றால், அது மற்ற இடங்களுக்கு விநியோகம் செய்த பின் சில்லறை விலை, மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக