கடலூர்-புதுச்சேரி அருகே நேற்று கரையை கடந்த தானே புயலின் கோர தாண்டவத்தால் கடலூர், புதுச்சேரி பகுதியில் பலர் வீடுகளை இழந்தனர். மீனவர்கள் மீன்வலைகள், படகுகளை இழந்தனர். கோடிக்கணக்கில் சேதம் ஏற்பட்டுள்ளது. புயலால் ஏற்பட்டுள்ள இழப்புகள், சேதங்களை உடனடியாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி முதல்-அமைச்சர் ஜெயலலிதா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் இன்று கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் வரும் ஜனவரி 4ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மீட்பு பணிகளை செய்வதற்கு வசதியாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக