வியாழன், டிசம்பர் 22, 2011

மசோதா நிறைவேற்றம் எண்ணெய் குழாயை உடைத்தால் மரண தண்டனை !

புதுடெல்லி : பெட்ரோலிய பொருட்கள் செல்லும் எண்ணெய் குழாய்களை உடைத்தால் அதிகபட்சம் மரண தண்டனை வரை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. வடகிழக்கு மாநிலங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்களை அடிக்கடி தகர்த்து வருகின்றனர். இதைத்தடுக்க, பெட்ரோலிய
பொருள் குழாய்கள் திருத்த மசோதா 2010 மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. 

எண்ணெய் குழாய்களை உடைப்பவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை, அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கவும் இந்த மசோதா வகை செய்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாங்கள் நிரபராதிகள் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இதனால் அப்பாவிகள் பாதிக்கப்படுவார்கள் என்று பல கட்சிகளின் உறுப்பினர்களும் கவலை தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த பெட்ரோலிய துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங், ‘‘மிகவும் அரிதிலும் அரிதான வழக்குகளில் நாசவேலையில் ஈடுபடுவோருக்கும் எதிராக மட்டுமே இந்த பிரிவு பொருந்தும். கடந்த 5 ஆண்டுகளில் எண்ணெய் குழாய்கள் உடைக்கப்பட்டதன் மூலம் அரசுக்கு ஸி16.04 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். பின்னர், மசோதா நிறைவேறியது. மக்களவையில் ஏற்கனவே மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், ஜனாதிபதி ஒப்புதலுக்கு பின் சட்டமாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக