வியாழன், டிசம்பர் 22, 2011

மத்திய அரசா! மதிகெட்ட அரசா!

 முல்லை பெரியாறு விவகாரத்தில் அடாவடி செய்யும்கேரள அரசை கண்டித்தும், இரு மாநில மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டித்தும், 
உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த வலியுறுத்தியும், தமிழகத்தின் 5 மாவட்டங்களின் விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் தேனியில் மாபெரும் போராட்டத்தை சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI)நடத்தியது.1). "மத்திய அரசு தொடந்து தமிழக நலனை, தமிழர்களின் நலனை புறக்கணித்து வருகிறது. காவிரி மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்த கர்நாடகாவை கட்டுப்படுத்தி தமிழகத்திற்கு உரிய நீரை
பெற்றுத்தர வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால் இக்கடமையிலிருந்து தொடர்ந்து பின் வாங்கியிருக்கிறது. 

2). "கச்சத்தீவில் தமிழர்களின் மீன்பிடிக்கும் உரிமையை நிலை நாட்ட வேண்டிய தமிழக அரசு அதில் தவறியதோடு தொடர்ந்து கொல்லப்பட்டும், தாக்கப்பட்டும், வரும் தமிழக மீனவர்கள் விஷயத்தில் தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறது. மத்திய அரசோ தமிழர்களை பாதுகாக்காமல் சிங்கள இனவெறி ராணுவத்திற்கு துணை நிற்கிறது'.

3). இலங்கையில் அப்பாவி தமிழர்கள், கொல்லப்பட்டும் அகதிகளாக்கப்பட்டும் இலங்கை அரசால் கொலை வெறியாட்டம் நிகழ்த்தப்பட்டது. இதை கண்டித்து ஒட்டு மொத்த தமிழகமும், தமிழர்களுக்கெதிரான தாக்குதல்களை தடுத்து நிறுத்திட மத்திய அரசை கோரிய போது செவி சாய்க்க மறுத்ததோடு, இலங்கை ராணுவத்திற்கு தேவையான ஆயுத உதவிகளை மத்திய அரசு வழங்கியது. தமிழர் படுகொலையை வேடிக்கை பார்த்தது. 

4) கூடங்குளம் அணுஉலையில் போராட்டத்தை திசை திருப்பும் நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் மக்கள் போராட்டமாக மாறியுள்ள கூடங்குளம் அணுஉலையில் போராட்டத்தை திசை திருப்ப வேண்டிய நிர்பந்தம் மத்திய அரசுக்கு உள்ளது.அதனாலேயே இந்த சூழ்நிலையில் முல்லை பெரியாறு பிரச்னையை உண்டாக்கி அதன் பக்கம் தமிழர்களின் கவனம் செல்லுமாறு சூழ்ச்சி செய்துள்ளது. தமிழக மக்களை தொடர்ந்து புறக்கணிக்கும் மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம் என்று அதன் மாநில தலைவர் தேகலான் பாகவி, மற்றும் முத்துபேட்டை சித்தீக் ஆகியோர் பேசினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக