சனி, டிசம்பர் 31, 2011

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அருகே தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய அனல்மின் நிலையம் ரூ.20 ஆயிரம் கோடியில் அமைக்கப்படுகிறது

கல்பாக்கம், டிச.31-காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அருகே சுமார் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் தமிழ்நாட்டி லேயே மிகப்பெரிய அனல்மின் நிலையம் அமைக்கப்படுகிறது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர் மான கழகத்தின் மேற் பார்வை பொறியாளர் (திட்டம்) கணபதி சங்கரன் தெரிவித்தார்.

புதிதாக அமைய வுள்ள அனல்மின் நிலைய பணிகள் குறித்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் செய் யூரில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சுதர்சனம் தலைமை தாங்கினார். மதுராந்தகம் ஆர்.டி.ஓ. ஆலின்சுனேஜா முன் னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு மின்உற்பத்தி திட்ட மேற்பார்வை பொறியாளர் கணபதி சங்கரன் கலந்து கொண்டு பேசும் போது கூறிய தாவது:- மத்திய அரசின் நிறுவனமான கோஸ் டல் தமிழ்நாடு பவர் லிமிடெட் சார்பாக செய்ர் அடுத்த பனைர் கிராமத்தில் சுமார் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் 4 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல் மின்நிலையம் அமைக்கப்பட உள்ளது. நாட்டின் மின் தேவை அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக உயரும் சாத்தியம் உள்ளதால் அதனை எதிர்கொள் வதற்கு இந்த அனல் மின்நிலையம் மிகவும் அவசியமாகிறது. வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிலக்கரியை பயன் படுத்தி மின்சாரம் தயா ரிக்கும் போது சாம்பல் மற்றும் மாசு அளவுகள் மிக குறைவாகவே இருக் கும். எனவே இறக்குமதி செய்யப்படும் நிலக்க ரியை கொண்டு அதி நவீன தொழில் நுட்பத் தில் இங்கு மின்சாரம் தயாரிக்கத் திட்ட மிடப்பட்டுள்ளது. பவர் பைனான்ஸ் கார்ப்ப ரேசன் லிமிடெட் மற் றும் மத்திய மின்சார ஆணையத்தின் வழிகாட் டுதலின் படி இயக்கப் பட உள்ள இந்த திட்ட பணிகளின் போது குளிர் விக்க கடல் நீர் பயன் படுத்தப்படும். இங்கு உற்பத்தியாகும் 4 ஆயி ரம் மெகாவாட் மின் சாரத்தில் 1,600 மெகா வாட் மின்சாரம் தமிழ கத்திற்கு வழங்கப்படும். தமிழ்நாட்டிலேயே மிக பெரிய அனல்மின் நிலையமாக இது அமை யும். இந்த மின்நிலையம் அமைய உள்ள பனையூர் கிராமத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் துறை முகம் அமையவிருக் கிறது. ஹெக்டேருக்கு 1,500 மரங்கள் என்ற அளவில் வனத்துறை யினர் ஆலோசனைக்கு ஏற்ப பசுமை மண்டலம் உருவாக்கப்படும். சுற்றுப்புற கிராம மக்களின் வாழ்க்கை தரம் உயர உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, புதிய பள்ளிக்கூடங்கள் மற் றும் பொது சுகாதாரம் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக