வெள்ளி, டிசம்பர் 23, 2011

முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவினர் இன்று ஆய்வை மேற்கொள்கின்றனர் !


இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக பிரச்சினை நீடித்து வரும் நிலையில், அணையை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவினர் இன்று(23.12.2011) ஆய்வு செய்ய உள்ளனர்.கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் உறுப்பினர்கள் இன்று மற்றும் நாளை(23.12.2011-24.12.2011) ஆகிய 2 நாள்கள் அணையில்
ஆய்வு நடத்துகின்றனர்.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் கேரள அரசின் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.டி. தாமஸ், தமிழகத்தின் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், மத்திய நீர்வளத் துறையின் செயலாளர்கள் சி.டி.தத்தே, டி.கே.மேக்தா சத்பால் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணை ஆய்வைத் தொடர்ந்து, தேனி மாவட்டம் லோயர் கேம்ப் மின் உற்பத்தி நிலையம், போர்-பை அணை, வால்வு ஹவுஸ், வைகை அணை ஆகியவற்றையும் பார்வையிட இருப்பதாகத் தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக