வியாழன், டிசம்பர் 22, 2011

பெண்ணின் வயிற்றிலிருந்து 25 வருடங்களின் பின் மீட்க்கப்பட்டும் எழுதும் பேனா!


பெண் ஒருவரின் வயிற்றிலிருந்து அறுவைச்சிகிச்சை மூலம் பேனை ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது. ஆனால் அறுவைச் சிகிச்சை நிபுணர்களே வியந்த விடயம் என்னவென்றால், 25 வருடங்களாக பெண்ணின் வயிற்றிலிருந்து மீட்க்கப்பட்ட பேனை இன்றும் எழுதுகின்றது.
தற்போது 76 வயதை எட்டியுள்ள குறித்த பெண் 1980 ஆம் ஆண்டுகளில் தவறுதலாக பேனை ஒன்றை விழுங்கியுள்ளார்.

இவர் நாக்கில் பேனையை வைத்து அண்ணாந்து பார்க்கும் போதே எதிர்பாராத விதமாக விழுங்கியுள்ளார். அந்த நேரம் யாரும் இதை நம்பவில்லை. மருத்துவமனையில் ஸ்கான் பண்ணிப் பார்த்த போதும் பிடிபடவில்லை.
ஆனால் 25 வருடங்களின் பின்னர் தற்போது பெண்ணின் வயிற்றில் பேனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் வயிற்றுவலி, நிறைக்குறைவு போன்ற பிரச்சினைகளால் அவதிப்பட்டு வயிற்று நோயியல் சிறப்பு நிபுணரிடம் காட்டிய போது தான் வயிற்றில் பேனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை நிபுணர்களால் பேனா அகற்றப்பட்டுள்ளது. குறித்த பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை செய்த Royal Devon & Exeter என்ற இரு மருத்துவர்களும் பெண்ணின் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட பேனா இப்பவும் வேலை செய்வதை எண்ணி ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
NHS Foundation Trust மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் இந்த ஆச்சரியத் தகவலை British Medical Journal என்ற பிரித்தானியாவின் பிரபல மருத்துவப் பத்திரிகைக்கும் அனுப்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக