வெள்ளி, டிசம்பர் 23, 2011

குஜராத்தில் குழந்தைகளுக்கு செலுத்தபட்ட ரத்தத்தில் எய்ட்ஸ் கிருமி : விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு


குஜராத் மாநிலத்தில் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் நோய் பரவியது குறித்து விசாரணை நடத்தும்படி மாநில போலீசாருக்கு மாநில ஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சுமார் 23 குழந்தைகள் மர்ம நோய் தாக்குதல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தனர். ‌ நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையின் ஒரு பகுதியாக ரத்தம் செலுத்தப்பட்டது. ‌‌ செலுத்தப்பட்ட ரத்தத்தில் எய்ட்ஸ் கிருமி இருந்ததால் சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் எய்ட்ஸ் ‌நோயால்
பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து குழந்தைகளின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு குறித்து விசாரித்த ஐகோர்ட் நீதிபதி பாஸ்கர் பட்டாச்சார்யா விசாரண‌ை நடத்தி அறிக்கை தர போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் மருத்துவமைனக்கு ரத்தம் வழங்கும் தனியார் நிறுவனங்களின் லைசென்சை அரசு ரத்து செய்ய கோர்ட் உத்தரவிட வேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதி விசாரணைக்கு பின்னர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக