வியாழன், டிசம்பர் 29, 2011

லோக்பால் மசோதாவில் இருந்து லோக் அயுக்தாவை நீக்க மம்தா திடீர் போர்க்கொடி

லோக்பால் மசோதாவில் இருந்து லோக் அயுக்தா தொடர்பான அனைத்து அம்சங்களையும் நீக்கும் படி மாநிலங்களவையில் திருத்தம் கொண்டு வரப் போவதாக அய்மு கூட் டணியின் முக்கிய கட்சி யான திரிணாமுல் காங் கிரஸ் அறிவித்துள்ளது. ஊழலை ஒழிப்பதற் கான லோக்பால் மசோதா, மக்களவையில் நேற்று முன்தினம் இரவு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா, மாநிலங் களவையில் இன்று தாக் கல் செய்யப்பட உள்ளது. 

லோக்பால் அமைப்பை போல், மாநிலங்களில் ஊழல் விவகாரங்களை விசாரிக்க லோக் அயுக்தா அமைக்க வேண்டும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இது மாநிலங்களின் அதிகா ரத்தில் தலையிடும் செய லாகும் என்று அய்மு கூட்டணியை சேர்ந்த முக்கிய கட்சியான மம்தா பானர்ஜியின் திரிணா முல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது

இந்த நிலையில், லோக்பால் மசோதாவில் இருந்து லோக் அயுக்தா சம்பந்தப்பட்ட எல்லா அம்சங்களையும் நீக்கும் படி மாநிலங்களவையில் திருத்தம் கொண்டு வரப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் கல்யாண் பானர்ஜி நேற்று கூறினார். இதனால், மத் திய அரசுக்கு தர்மசங்க டம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், மாநிலங்கள வையில் எந்த மசோதா வையும் நிறைவேற்றும் அளவுக்கு அரசுக்கு பெரும் பான்மை இல்லை.

ஒருவேளை, திரிணா முல் காங்கிரசின் திருத் தம் ஏற்கப்பட்டால், லோக்பால் மசோதா மீண்டும் மக்களவையின் பரிசீலனைக்கு அனுப் பப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக