சனி, டிசம்பர் 31, 2011

‘ஈராக் ஃபலுஜாவில் என்னுடைய பங்கு குறித்து நான் மன்னிப்பு கோருகிறேன்’ – ரோஸ் கேபுட்டி

ross-caputi
லண்டன்:ஈராக்கில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்திய போது அங்கு பிரிட்டன் படையில் இருந்த ரோஸ் கேபுட்டி என்னும் ராணுவ வீரர் தான் அந்த போரில் கலந்து கொண்டதற்காக மன்னிப்பு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது; ‘ஈராக்கின் ஃபலுஜா என்னும் இடத்தை இரண்டாவது தடவை முற்றுகையிட்டு இந்த வருடத்துடன் ஏழு வருடங்கள் ஆகிறது. அமெரிக்க படைகள் அந்நகரத்தை அழித்ததுடன் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றனர். மேலும் பல ஆயிரக்கணக்கான மக்களை
இடம் பெயரச் செய்தனர். மேலும் அந்த நகரில் வாழும் மக்களை கேன்சர் நோய்க்கு ஆளாக்கியதுடன் அங்கு பிறக்கும் குழந்தைகள் குறையுடனேயே பிறக்கின்றன’ என்று தெரிவித்துள்ளார்.
‘இது நடந்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டன ஆனால் எந்த காரணத்தை சொல்லி நாங்கள் தாக்குதலை மேற்கொண்டோமோ அது வெறும் பொய்யான நம்பிக்கை மட்டுமே. மேலும் அமெரிக்க வீரர்கள் இதுவரை தாம் எதற்க்காக பேர் செய்கிறோம் என்றும் யாரை எதிர்த்து போர் செய்கிறோம் என்றும் இன்னும் புரியாமல்தான் உள்ளனர்’ என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தானும் அந்த படையில் இருந்ததால் தனுக்கு அது நன்றாக தெரியும் என்றும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக